/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உலக நலன் வேண்டி கடல் அன்னைக்கு சமுத்திர பூஜை
/
உலக நலன் வேண்டி கடல் அன்னைக்கு சமுத்திர பூஜை
ADDED : ஜன 27, 2024 06:55 AM

பெரியபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள இந்திரா நகரில் மீன்வளம் பெருகவும், உலக நலன்வேண்டி சமுத்திர பூஜை நடந்தது.
இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் மன்னார் வளைகுடா கடற்கரை முன்பு காலையில் தாம்பூல தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பசும்பால் ஆகியவற்றுடன் வாழை இலையில் படையல் வைத்தனர். பின்னர் தேங்காய் உடைத்து கடலுக்கு தீப ஆராத்தி காட்டினர். பாலை கடலில் ஊற்றி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், உலகநலன்வேண்டியும், மீன்வளம் பெருகவும், பாரம்பரியமாக 108 சங்காபிஷேகம் செய்து 108 செம்புகளில் பால் ஊற்றி கடல் அன்னையை வழிபடுகிறோம். என்றனர்.

