/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செங்குடி குடிநீர் கிணற்றை சுத்தம் செய்த அதிகாரிகள்
/
செங்குடி குடிநீர் கிணற்றை சுத்தம் செய்த அதிகாரிகள்
செங்குடி குடிநீர் கிணற்றை சுத்தம் செய்த அதிகாரிகள்
செங்குடி குடிநீர் கிணற்றை சுத்தம் செய்த அதிகாரிகள்
ADDED : ஜூன் 11, 2025 07:15 AM
ஆர்.எஸ்.மங்கலம், ஜூன் 11-
ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி ஊராட்சி மேலச்செங்குடி, செங்குடி பகுதிகளுக்கு செங்குடி கண்மாய் பகுதி கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நிரப்பி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
சில மாதங்களாக குடிநீர் கிணற்று நீர் துர்நாற்றம் வீசுவதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். மாசடைந்த கிணற்று நீரை சுத்தம் செய்ய வலியுறுத்தி தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
தினமலர் செய்தி எதிரொலியாக நேற்று காலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிணறு சுத்தம் செய்யப்பட்டு கிணற்றில் இருந்த கழிவுகள் அகற்றப்பட்டன. சுத்தம் செய்யப்பட்ட கிணற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.