/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கராத்தேயில் சாதனை
/
பரமக்குடி ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கராத்தேயில் சாதனை
பரமக்குடி ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கராத்தேயில் சாதனை
பரமக்குடி ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கராத்தேயில் சாதனை
ADDED : மே 23, 2025 11:39 PM

பரமக்குடி: பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அகில இந்திய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
காரடர்ந்தகுடியைச் சேர்ந்த குருநாதன் மகள் அனு ஸ்ரீ. மாணவி பரமக்குடி ஏ.வி., மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நான்கு ஆண்டுகளாக கராத்தே போட்டியில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். மே 21ல் திருச்சி ஜமால் முகமது கல்லுாரியில் நடந்த மாநில போட்டியில் குமித்தே பிரிவில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் நடக்க உள்ள அகில இந்திய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவி அனைத்து நிலைகளிலும் 28 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளார். பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர் பாராட்டினர்.