sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயணிகள் தவிப்பு:ராமநாதபுரத்தில் இரவு நேரத்தில் பெயரளவில் பஸ் இயக்கம்: உள்ளூர்களுக்கு இரவு 10:00 மணி வரை பஸ் வசதி வேண்டும்

ADDED : செப் 27, 2025 03:58 AM

Google News

ADDED : செப் 27, 2025 03:58 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப் படுகிறது. ராமநாதபுரத்தில் பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.

ராமநாதபுரம் டவுன், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு 9:00 மணி வரை டவுன் பஸ்கள் இயக்கப்படு கின்றன. அதன்பிறகு நிறுத்திவிடுகின்றனர்.

இதனால் ரயில்கள் மற்றும் வெளியூர் பஸ்களில் வரும் பயணிகள் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ஆட்டோ, டாக்சியில் அதிக பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. சிலர் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் குடும்பத் தினருடன் இரவில் பயணம் மேற்கொள்ளும் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப் படுகின்றனர்.

இரவு நேரத்தில் வசூல் குறைவு என்ற காரணத்தால் அரசு டவுன் பஸ்கள் இயக்குவது இல்லை என போக்குவரத்து அதி காரிகள் காரணம் சொல்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி ராமநாதபுரம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பரமக்குடி, சாயல்குடி, திருவாடானை உள்ளிட்ட வெளி மாவட்ட பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரவு 10:00 மணி வரை அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

      Dinamalar
      Follow us