/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு: 50 சதவீதம் டாக்டர்கள் பற்றாக்குறையால்

ADDED : மே 26, 2025 02:06 AM

ராமநாதபுரம்: பொது மருத்துவம், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, கண், பல், தோல், காது மூக்கு தொண்டை பிரிவு, இதய பிரிவு,ரேடியாலஜி பிரிவு போன்ற பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கு 50 சதவீத டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்படாத நிலையில் உள்ளனர். இதனால் சிகிச்சைக்காக நீண்டே நேரம் காத்திருந்து நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 2021 ல் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக்கல்லுாரி துவக்கப்பட்டது. அதற்கான தரம் உயர்த்தப்பட்டதை தவிர வேறு கட்டமைப்பு வசதிகளில் கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளது. போதுமான டாக்டர்கள் இன்று வரை நியமிக்கப்படாமல் உள்ளனர். 180 டாக்டர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். இதில் எலும்பு முறிவு பிரிவு, மயக்கவியல் பிரிவில் மட்டுமே போதுமான டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற பொது மருத்துவம், மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, கண், பல், தோல், காது மூக்கு தொண்டை பிரிவு, இதய பிரிவு,ரேடியாலஜி பிரிவு போன்ற பல்வேறு சிறப்பு பிரிவுகளுக்கு 50 சதவீத டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் போதுமான டாக்டர்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நோயாளிகள் மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்படுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு போதுமான டாக்டர்களை நியமித்து நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ----