நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் :  -முதுகுளத்துார் வெள்ளாவி மாடன் 54ம் ஆண்டு துறை பொங்கல் விழா நடந்தது.  ஒருவாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர்.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து மக்கள் பொங்கல் பெட்டியை  அரசு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை முருகன் கோயில் வழியாக செல்வி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக தூக்கி சென்றனர்.
பின்பு  பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். மூலவரான செல்விஅம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் என 21 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 108 விளக்கு பூஜை நடந்தது.

