ADDED : பிப் 05, 2024 11:43 PM

ராமநாதபுரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வட்டார அளவில் 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கான துளிர் வினாடி வினா போட்டிகள் நடந்தது. இதில் முதலிடம் பெற்ற பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டி சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.
மாவட்டத் தலைவர் லியோன் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ., கல்லுாரி தாளாளர் தேவமனோகரன் மார்ட்டின், முதல்வர் ஆனந்த், அரசு மகளிர் கலைக்கல்லுாரி துணை முதல்வர் ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தனர். மாவட்டக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ், புத்தகம் பரிசாக வழங்கினார்.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி, மஞ்சூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் பங்கேற்றனர். போட்டியில் 9,10 ம் வகுப்பு பிரிவில் பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், காமன்கோட்டை அரசுப்பள்ளி மூன்றாம் இடம் பெற்றன.
பிளஸ் 1, 2 பிரிவில் சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், கீழக்கரை ஹமீதியா பெண்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம் பெற்றன.
ஜந்தர் மந்தர் வினாடி வினா-போட்டியில் 7, 8ம் வகுப்பு பிரிவில் தேவிப்பட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி முதலிடம், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம், ராமநாதபுரம் செய்யது அம்மாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. முதல் இரு இடங்களை பெற்ற அணியினர் மாநில அளவில் பிப்.10ல் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஜந்தர் மந்தர் ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் நன்றி கூறினார். ----------