/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விளைச்சல் நிலத்தில் வடியாத மழைநீர்: விவசாயிகள் கவலை
/
விளைச்சல் நிலத்தில் வடியாத மழைநீர்: விவசாயிகள் கவலை
விளைச்சல் நிலத்தில் வடியாத மழைநீர்: விவசாயிகள் கவலை
விளைச்சல் நிலத்தில் வடியாத மழைநீர்: விவசாயிகள் கவலை
ADDED : ஜன 27, 2024 06:38 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மானாங்கரை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாததால் பயிர்கள் வீணாகி மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கருக்குமேல் நெல் சாகுபடி செய்தனர். நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் பெய்த மழையால் ஏராளமான கிராமங்களில் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் வீணாகியது. நஷ்டம் அடைந்த விவசாயிகள் ஒருசில கிராமங்களில் வேறுவழியின்றி கூடுதல் பணம் செலவு செய்து அறுவடை வாகனத்திற்கு பணமின்றி சிரமப்பட்டனர். மானங்கரை உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் தண்ணீர் வெளியேற்ற முடியாததால் பயிர்கள் முழுவதும் வீணாகி உள்ளது. நெல்மணிகள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது. எனவே அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஆய்வு செய்து காலதாமதம் செய்யாமல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

