/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
/
ராமேஸ்வரத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
ADDED : ஜன 10, 2024 12:16 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பகுதியில் பெய்த கன மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நேற்று காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை ராமேஸ்வரம், பாம்பன் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கோயில் நான்கு ரதவீதி, ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் ஊர்ந்தபடி சென்றன.
மேலும் ராமேஸ்வரம் அம்பேத்கர் காலனி தெருவில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.
தங்கச்சிமடம் விக்டோரியா நகர், பாம்பன் தரவைதோப்பு, மண்டபம் எருமைதரவை பகுதியில் மழைநீர் 2 அடி உயரத்திற்கு தேங்கியது. இம்மழையால் நேற்று பெரும்பாலான மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

