/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்ற மறந்தது ஏனோ
/
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்ற மறந்தது ஏனோ
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்ற மறந்தது ஏனோ
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்ற மறந்தது ஏனோ
ADDED : ஜன 27, 2024 05:29 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் குடியரசு தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடியேற்றப்படாமல் இருந்ததால் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் காதர்பாட்ஷா இவருக்கு அலுவலகம் பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் பகுதியில் அரசு சார்பில்அலுவலகம் கட்டி தரப்பட்டுள்ளது. இங்கு எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா செல்வதும் எப்போதாவது மட்டுமே நடக்கும்.
நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கொடி ஏற்றுவதற்கான கொடிமரம் இருந்தும்தேசிய கொடி ஏற்றப்படவில்லை. கொடி ஏற்றாமல் மறந்து விட்டனர்.
ஒரு எம்.எல்.ஏ., வாக இருப்பவருக்கு நாட்டுப்பற்றி சிறிதளவேனும் இருக்க வேண்டும். அதைப்பற்றி எல்லாம் சிந்திக்க நேரமில்லாததால் கொடியேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இனியாவது ராமநாதபுரம் எம்.எல்.ஏ., தனது அலுவலகத்தில் மக்களை சந்திக்கவும், வளர்ச்சித்திட்டப்பணிகளை செய்யவும், முக்கிய நாட்களில் கொடியேற்றவும் முன் வர வேண்டும், என ராமநாதபுரம் பொது மக்கள் வலியுறுத்தினர்.