/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி விசாரணை ஜூலை 17க்கு தள்ளிவைப்பு
/
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி விசாரணை ஜூலை 17க்கு தள்ளிவைப்பு
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி விசாரணை ஜூலை 17க்கு தள்ளிவைப்பு
ராமேஸ்வரம் கோயிலில் ரூ.1 கோடி மோசடி விசாரணை ஜூலை 17க்கு தள்ளிவைப்பு
ADDED : ஜூன் 27, 2025 11:45 PM
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஊழியர்கள் சேம நல நிதியில் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் விசாரணை ஜூலை 17க்கு தள்ளி வைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் கோயில் ஊழியர்கள் சேம நல நிதி கணக்கில் செலுத்த வேண்டிய பணத்தை கோயில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவனருள் குமரன், கணக்கர் ரவீந்திரன் மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பின் 2020 ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. போலீசார் விசாரணையில் ராமநாதபுரம் கரூர் வைஸ்யா பாங்கில் கோயில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு தொடங்கி மோசடி செய்ததும், கணக்கு தொடங்க முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
சிவனருள்குமரன் கோயில் பணத்தை தனது தந்தை கோபால் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது. சி.பி.சி.ஐ.டி போலீசார் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சிவனருள்குமரன், இவரது தந்தை கோபால், கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் ஜே.எம்., 2வது கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கணக்கர் ரவீந்திரன், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் மட்டும் ஆஜராகினர். சிவனருள்குமரன், அவரது தந்தை கோபால் ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. மாஜிஸ்திரேட் சுஜித் வழக்கை ஜூலை 17க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.