/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
/
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2024 05:37 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் 75வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் தினமலர் நகரில் உள்ள 'தினமலர்' நாளிதழ் கிளை அலுலகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, போலீசார் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ண பலுான், சமாதான புறாவை பறக்கவிட்டார்.
காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 63 போலீசார், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 189 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண் துறை, சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறை சார்பில், 83 நபர்களுக்கு ரூ. 28 லட்சத்து 84 ஆயிரத்து 802 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பாண்டியராஜ் மனைவி காளியம்மாளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இவ்விழாவில் டி.ஐ.ஜி., துரை, எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் கலெக்டர் ரத்தினசாமி, வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஸ் சுதாகர், மாவட்ட வன அலுவலர் ேஹமலதா, சப்கலெக்டர் அபிலாஷா கவுர், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கற்றனர்.---------
அரசு அலுவலகங்கள்
* ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., கோபு தலைமை வகித்தார். அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தலைவர் கார்மேகம் கொடியேற்றினார். கமிஷனர் அஜிதா பர்வின், பொறியாளர்கள், அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
*ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட அலுவலர் ேஹமலதா கொடியேற்றினார்.
வனஉயிரின பாதுகாப்பு அலுவலகத்தில் ரேஞ்சர் திவ்ய லட்சுமி கொடியேற்றினார், பாரஸ்டர் ராஜேஷ்குமார், வாட்சர்கள் பங்கேற்றனர்.
* ராமநாதபுரம் ராணுவ சங்க கட்டடத்தில் தலைவர் ைஹதர் அலி தலைமை வகித்தார். செயலாளர் முருகானந்தம் கொடியேற்றினார். நிர்வாகிகள் பூமிநாதன், ராமசாமி,
தர்மலிங்கம் பங்கேற்றனர்.
பள்ளி , கல் லுாரிகள்
செய்யது அம்மாள் கலை--அறிவியல் கல்லுாரியில் முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இயற்பியல் துறைத்தலைவர் பிரபாவதி வரவேற்றார்.
செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளதளர் ராஜாத்தி அப்துல்லா முன்னிலை வகித்தார். தாளாளர் செல்லத்துரை அப்துல்லா கொடிஏற்றினார்.
நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா பங்கேற்றனர்.
* செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.தாளாளர் சின்னத்துரை அப்துல்லா கொடியேற்றினார். உடற்கல்வி இயக்குநர் சத்தியேந்திரன், அலுவலக பணியாளர்கள்பங்கேற்றனர்.
* வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்க மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கணேசன் கொடியேற்றினார். முதல்வர் பூங்குழழிவரவேற்றார். ஆசிரியர் செங்கொடி நன்றி கூறினார்.
*செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளியில் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தேசியக்கொடியேற்றினார்.
தலைமையாசிரியர் விசாலாட்சி, உதவி தலைமையாசிரியர் விசாலாட்சி, ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
*சித்தார்கோட்டை முகம்மதியா பள்ளியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபாவின் தலைவர் முகமது தவுபீக் கரீம் மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்றினார். ஆரம்ப பள்ளியில் ஆயுட்காலத்தலைவர் முகமது யூசுப், கொடியேற்றினார்.
முகம்மதியா பள்ளிகளின் துணைத்தலைவர் முகமது ஷாஜஹான், தாளாளர் அஹமது கபீர், ஊராட்சி தலைவர் முஸ்தரி ஜஹான் ரைசுதீன், முஸ்லிம் தர்மபரிபாலன சபா ஜமா அத், பள்ளிகளின் செயலர் செய்யது அஹமது கபீர்,தலைமையாசிரியர் ஜவஹர்அலி, ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியை சாஜிதா பானு உதவி தலைமையாசிரியர் சுரேஷ்பாபு பங்கேற்றனர்.
* சி.எஸ்.ஐ.,கல்வியியல் கல்லுாரியில் தாளாளர் மனோகரன் மார்ட்டின் கொடியேற்றினார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். கேக் வெட்டினர், மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
*சூரங்கோட்டை ஊராட்சி ஒன்றியதுவக்கபள்ளியில் ஊராட்சித்தலைவர் தெய்வேந்திரன் கொடியேற்றினார். இந் தலைமையாசிரியை ஜீவரேகா வரவேற்றார். அங்கன்வாடி பணியாளர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்.
ராம்நாடு வாசவி கிளப் தலைவர் பிரதாசிவக்குமார், சேர், விளையாட்டுபொருட்கள், நோட்டு, புத்தகங்கள் வழங்கினார்.
ஊட்டசத்துஉணவுகளை மதுராகார்த்திஷ், மதுமதன், யோகின்யா, லாவண்யா வழங்கினர்.முதுகுளத்துார்
அலுவலகங்கள்: முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,க்கள் ஜானகி,அன்புக்கண்ணன் தலைமையில் ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா தேசிய கொடி ஏற்றினார்.
முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஷாஜகான் தேசிய கொடி ஏற்றினார்.செயல் அலுவலர் செல்வராஜ், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர்.
தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சடையாண்டி, டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி., சின்னகண்ணு, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சரவணன், முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் நாகரஞ்சித் தேசிய கொடி ஏற்றினார். உடன் தலைமை செவிலியர்கள் சண்முகவள்ளி, இளங்கோவன் பங்கேற்றனர்.
முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் மாலதி தேசியக்கொடி ஏற்றினார். உடன் உதவி பொறியாளர் சுசீந்திரன் பங்கேற்றனர்.
முதுகுளத்துார் காந்தி சிலை அருகே காங்., கட்சி சார்பில் நகரத்தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம் தேசிய கொடி ஏற்றினார்.
முதுகுளத்தூர் த.மு.மு.க., கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சாதிக் தேசிய கொடி ஏற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சல்மான் ரபீக், நகர தலைவர் அப்துல் ரகுமான் உட்பட நிர்வாகிகள் இருந்தனர்.
முதுகுளத்தூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பில் கேப்டன் செந்தூர்பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.தலைவர் கண்ணன், செயலாளர் வேலு, பொருளாளர் துரைசாமி முன்னிலை வகித்தனர்.உடன் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊராட்சி அலுவலகங்கள்
முதுகுளத்துார் ஒன்றியம் ஊராட்சிகள் அலுவலகங்களில் குடியரசு தினவிழாவில் தலைவர்கள் சரஸ்வதி (அரப்போது), சத்யபிரியா (பொன்னக்கனேரி), அபூபக்கர் சித்திக் (தேரிருவேலி), ஆனந்தநாயகி (ஆத்திகுளம்), தங்கபாண்டியன்(நல்லூர்), வினோத்குமார் (அலங்கானுார்), அழகம்மாள் (சாத்தனுார்), ராமலட்சுமி(ஆதனக்குறிச்சி), கதிரேசன்(ஆதங்கொத்தங்குடி), இந்திராகாந்தி(காத்தாகுளம்), சண்முகவள்ளி(கீழக்காஞ்சிராங்குளம்), ரதமணி(கீழக்கொடுமலுார்), ஊராட்சி ரவிச்சந்திரன் (கீழக்குளம்), ஊராட்சி தஸ்ரின்பானு(கொளுந்துரை), சரவணன்(மேலக்கொடுமலூர்), இந்துமதி (புளியங்குடி), செல்வி (சிறுதலை), அன்னபூரணம் (திருவரங்கம்), செந்தில்குமார் (வெங்கலகுறிச்சி), சண்முகவள்ளி (விளக்கனேந்தல்), செந்தில்(குமாரக்குறிச்சி), பால்சாமி (செல்வநாயகபுரம்), கண்ணன் (சித்திரக்குடி), சம்சத் பேகம் (மேலச்சிறுபோது), மீனாம்பாள் (புழுதிக்குளம்) தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.
கல்லுாரி பள்ளிகள்
முத்துகுளத்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி தேசிய கொடி ஏற்றினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராணி முன்னிலை வகித்தார். சேது சீமை பட்டாளம் சார்பில் இனிப்பு வழங்கினர்.
துாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து தேசிய கொடி ஏற்றினார்.
முத்துகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்தனவேல், காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரவீந்திரன், கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காந்திராசு தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.
இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் பொற்கொடி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஆரோக்கியமேரி தேசிய கொடி ஏற்றினார்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சாகுல்ஹமீது தேசிய கொடி ஏற்றினார். தலைமைஆசிரியர் முகமது அலாவுதீன் சுல்தான் முன்னிலை வகித்தார்.
பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் காதர்ஷா தேசிய கொடி ஏற்றினார்.
விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தேசிய கொடி ஏற்றினார். திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
*சோனைமீனாள் கலை- அறிவியல் கல்லுாரியில் முதல்வர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். தாளாளர் ரெங்கநாதன் தேசிய கொடி ஏற்றினார்.
ஆ ர்.எஸ்.மங் கலம்
அரசு அலுவலகங்கள்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் சுவாமிநாதன் தேசியக்கொடியேற்றினார். அலுவலர்கள், வருவாய் துறையினர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொடியேற்றினார்.
தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் கமலநாதன் தேசிய கொடியேற்றினார்.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில், யூனியன் தலைவர் ராதிகா கொடி ஏற்றினார். பி.டி.ஓ., ராஜேந்திரன், ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மௌசூரியா கொடியேற்றினார். செயல் அலுவலர் மாலதி, ஊழியர்கள் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லுாரிகள்
ஆர்.எஸ்.மங்கலம் அளுந்திக்கோட்டை நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை ஜோதி கொடியேற்றினார். உதவி ஆசிரியர் சாந்தி பங்கேற்றார்.
இந்திரா நகர் துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை காளியம்மாள் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் காளிதாஸ் பங்கேற்றார்.
திருத்தேர்வளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் இருதயசாமி கொடியேற்றினார். உதவி ஆசிரியர் ஜெரால்டு பங்கேற்றனர்.
ராதானுார் நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் லதா கொடி ஏற்றினார். உதவி ஆசிரியர் அருள்செல்வன் பங்கேற்றனர்.
ஏ.ஆர்.மங்களம் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரேமா கொடியேற்றினார். உதவியாசிரியர் முருகானந்தம் பங்கேற்றார்.
சனவேலி கல்யாணி துவக்கபள்ளியில், தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் ராணி பங்கேற்றனர்.
வாகைக்குடி துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் குமரேசன் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் பிரபா பங்கேற்றார்.
கருங்குடி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் வேத ஆரோக்கிய ஸ்டாலின் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் மிக்கேல் அம்மாள் பங்கேற்றார்.
சுத்தமல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஜோசப் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் பூபதி பங்கேற்றார்.
சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் லூயிஸ் ராஜமாணிக்கம் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் சிபி பங்கேற்றார்.
வடக்கலூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி கொடியேற்றினார். உதவி ஆசிரியர் ஆரோக்கிய மேரி பங்கேற்றார்.
கீழ் மருதங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஜெசிந்தா கொடியேற்றினார். உதவியாசிரியர் செல்வகுமார் பங்கேற்றார்.
திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜு கொடியேற்றினார். கிராமத் தலைவர் தமிழ்காளை பங்கேற்றார்.
ஆர்.எஸ்.மங்கலம் பிரிட்டோ மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், தாளாளர் ஹாஜி கமர்தீன் தலைமையில், டாக்டர் செந்தில் நாயகம் கொடியேற்றினார்.
ஆர்.எஸ்.மங்கலம் வர்த்தக சங்கம் சார்பில், நடைபெற்ற விழாவில், வர்த்தக சங்க தலைவர் அயூப்கான் தலைமையில், டாக்டர் ராமநாதன் கொடியேற்றினார். ஜமாத் தலைவர் ஹாஜா நஜிமுதீன் பங்கேற்றார்.
ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ராஜு கொடியேற்றினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ், கவுன்சிலர் வைரவன் பங்கேற்றனர்.
தேவிபட்டினம்
பள்ளி, கல்லுாரிகள்: தேவிபட்டினம் அருகே பனைக்குளம் முஸ்லிம் பரிபால சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், ஆகிய பகுதிகளில் பரிபாலன சபை தலைவர் அப்துல் வகாப் கொடியேற்றினார்.
பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, யூசுப் நர்சரி பள்ளி ஆகிய பகுதிகளில் முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி கொடியேற்றினார்.
ஆனந்துார் அருகே ஆயங்குடி ஜோதி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை தேன்மொழி கொடியேற்றினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அலுவலகங்கள்: பனைக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பவுசியா பானு கொடியேற்றினார்.
ஆர்.எஸ்.மங்கலம் சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ரூபி சாந்தகுமாரி கொடியேற்றினார். தொழிலதிபர் காதர் மீரா பங்கேற்றார்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே குலமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஊராட்சி தலைவர் முத்து கொடியேற்றினார்.
தலைமை ஆசிரியர் தர்மராஜ், ஆசிரியர் வினோத் பாபு பங்கேற்றனர். பெருமாள்மடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை அன்பரசி கொடியேற்றினார்.
உதவி ஆசிரியர் திவ்யா கலந்து கொண்டார். கொக்கூரணி ஆர்.சி.துவக்கப்பள்ளியில் நிர்வாகி ராஜமாணிக்கம் கொடியேற்றினார்.
தலைமை ஆசிரியர் ஜெயராணி, ஆசிரியர் ஜான் ரவி பங்கேற்றனர்.
கீழக்கரை
பள்ளி, கல்லுாரிகள்: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் முதல்வர் சுமையா தேசியக் கொடியை ஏற்றினார். மாணவியர் பேரவையின் உறுப்பினர் வர்ஷினி வரவேற்றார். சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவூத் கான், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
* கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் ராஜசேகர் கொடியேற்றினார்.
ஆங்கிலத் துறை தலைவர் நெல்சன் டேனியல் வரவேற்றார். பேராசிரியர் சுலைமான், பலர் பங்கேற்றனர்.
* கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வர் சேக் தாவூத், என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
*கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் 75வது குடியரசு தின விழா நடந்தது முதல்வர் நிர்மல் கண்ணன் தேசிய கொடியேற்றினார்.
தலைமை ஆராய்ச்சி அலுவலர் செல்வ பெருமாள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேஷ்வரன், பங்கேற்றனர்.
* பெருநாழி அருகே உச்சி நத்தம் ஸ்ரீ ஆறுமுக விலாஸ் ஹிந்து ஆரம்பப் பள்ளியில் செயலாளர் காசிமுத்து வீரபாண்டியன் கொடியேற்றினார்.
தலைமை ஆசிரியர் சுந்தர மகாலிங்கம் வரவேற்றார். உதவி ஆசிரியர் செல்வி, மாணவர் பங்கேற்றனர்.
* கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்கத்தின் சுப்ரமணியன் ஜெயலட்சுமி நாடார் பள்ளியில் டாக்டர் அன்பரசன் கொடியேற்றினார். ஒன்றிய துணை சேர்மன் சிவலிங்கம் முன்னிலை வைத்தார்.
கவுன்சிலர் ஜெயலட்சுமி, ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி கமிட்டி தலைவர் செந்தில்குமார் தாளாளர் கார்த்திக் பங்கேற்றனர். முதல்வர் சுரேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
அலுவலகங்கள்: திருப்புல்லாணியில் வீரத் தளவாய் வெள்ளையன் அகமுடையார் வரலாற்று மீட்பு குழு சார்பில் வெள்ளையன் சேர்வை சத்திரத்தில் நிறுவனத் தலைவர் ரத்தினகுமார் கொடியேற்றினார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் மருது, ரவி, அருண் பங்கேற்றனர்.
கீழக்கரை நகர் காங்., கமிட்டி சார்பில் நகர் தலைவர் அஜ்மல் கான் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சித்திக் கொடி ஏற்றி வைத்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம் பங்கேற்றனர்.
கமுதி
அலுவலகங்கள்: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சித்ராதேவி, பி.டி.ஓ.,க்கள் மணிமேகலை, சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அப்துல் வகாப் சகாராணி கொடி ஏற்றினார். துணைத் தலைவர் அந்தோணி சவேரியார் அடிமை, செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தனர்.
அபிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பாத்திமா கனி கொடி ஏற்றினார். துணைத்தலைவர் மாரி முன்னிலை வகித்தார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேதுராமன், கமுதி அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் விஜயா, கமுதி தீயணைப்பு நிலையம் அலுவகத்தில் நிலைய அலுவலர் சந்திரசேகரன் தேசிய கொடி ஏற்றினர்.
ராமசாமிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முத்துகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார்.
உடன் இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
ஊராட்சி அலுவலகம்: கமுதி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் தலைவர்கள் பழனி (கீழராமநதி), புளியம்மாள் (நெடுங்குளம்), செந்தில் (காத்தனேந்தல்), வீரபாண்டி (புதுக்கோட்டை), லெட்சுமி (மரக்குளம்), சசிகலா (பம்மனேந்தல்) அமுதா (பாப்பணம்), காவடி முருகன் (ஆனையூர்), நாகரெத்தினம் (பாக்குவெட்டி) உட்பட 53 ஊராட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றினர்.
முதுகுளத்துார் அருகே விளங்குளத்தூர் பசும்குடில் ஆதரவற்றோர் குழந்தைகள், முதியோர்கள் காப்பகத்தில் அவார்டு டிரஸ்ட் செயலாளர் சின்னமருது தலைமை வகித்தார்.
எஸ்.ஐ., சுந்தரி கொடி ஏற்றினார். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவாடானை
அலுவலகங்கள்: திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் கொடியேற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் கொடியேற்றினார்.
துணை தலைவர் செல்வி, பி.டி.ஓ. கோட்டைராஜ், சந்திரமோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.
டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. நிரேஷ் கொடியேற்றினார். ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் இலக்கியா கொடியேற்றினார். துணை தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலர் சித்ரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கொடியேற்றினார். செயல்அலுவலர் மகாலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் தலைவர்கள் கொடியேற்றினர்.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் இணை ஆணையர் சிவராம்குமார், நகராட்சி அலுவலகத்தில் தலைவர் நாசர்கான், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயா கிரிஸ்டல்ஜாய், வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஞானசிலுவை, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த நம்பர் 1 அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

