/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடியில் கூடுதல் ஆதார் மையம் அமைக்க கோரிக்கை
/
கடலாடியில் கூடுதல் ஆதார் மையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 01, 2025 11:00 PM
கடலாடி: கடலாடி தாலுகா அலுவலகத்தில் புதிதாக ஆதார் எடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பதற்காக சென்றால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதே நேரத்தில் இன்டர்நெட் பிரச்னையும் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பிறந்த குழந்தையில் இருந்து ஐந்து வயது வரை பெற்றோர் உதவியுடன் ஆதார் எடுக்கின்றனர். 5 முதல் 18 வயது வரையிலும் மறு புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு எடுக்கின்றனர்.
இந்நிலையில் கடலாடி தாலுகா வளாகத்தில் ஆதார் எடுக்க மையம் ஒன்று மட்டுமே உள்ளதால் கூட்ட நெரிசல் மற்றும் இணையவழி பயன்பாடு சேவை குறைபாட்டால் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சாயல்குடி வி.வி.ஆர்., நகரை சேர்ந்த ராஜபாண்டியன் கூறியதாவது: சாயல்குடி போஸ்ட் ஆபீசில் ஆதார் பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவைகள் மட்டுமே செய்யப்படுகிறது. புதியதாக ஆதார் கார்டு எடுக்க 15 கி.மீ.,ல் உள்ள கடலாடிக்கு சென்று ஆதார் எடுக்க வேண்டியுள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சாயல்குடியில் ஆதார் சேவை மையம் அமைக்கவும், கடலாடியில் கூடுதல் ஆதார் மையங்களை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.