/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குப்பசிவலசையில் சேதமடைந்த படித்துறையால் விபத்து அபாயம்
/
குப்பசிவலசையில் சேதமடைந்த படித்துறையால் விபத்து அபாயம்
குப்பசிவலசையில் சேதமடைந்த படித்துறையால் விபத்து அபாயம்
குப்பசிவலசையில் சேதமடைந்த படித்துறையால் விபத்து அபாயம்
ADDED : ஜன 27, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குப்பசி வலசையில் ஊருணி படித்துறை சேதமடைந்துள்ளதால் குளிக்கும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் உள்ளது.
களிமண்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குப்பசி வலசையில் ஊருணி நிரம்பியுள்ளத.
இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட படித்துறை சேதமடைந்து இடிபாடுகளுடன் உள்ளது.
இடது பக்க கைப்பிடி சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் மக்கள் படித்துறையில் இறங்கினால் விபத்து அபாயம் உள்ளது.
எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் படித்துறை கைப்பிடி சுவரை இடித்து விட்டு புதிய சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.