/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டை மூடும் மணல் வாகன ஓட்டிகள் அவதி
/
ரோட்டை மூடும் மணல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 24, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை- திருவெற்றியூர் செல்லும் ரோட்டில் சில இடங்களில் மணல் மூடுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாடானை-திருவெற்றியூர் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அரும்பூர், குளத்துார் உள்ளிட்ட சில இடங்களில் கண்மாய் கரை ஓரமுள்ள மணல் சாலையை மூடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுவதால் கண்மாய் ஓரங்களிலிருந்து மணல் சாலையை மூடுகிறது. இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர் என்றனர்.