/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுதிகளில் தங்க பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
விடுதிகளில் தங்க பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விடுதிகளில் தங்க பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விடுதிகளில் தங்க பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 12, 2025 11:09 PM
ராமநாதபுரம்; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அரசு விடுதிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன.
பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்குப் பொருந்தாது.
பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வரை பயில்கின்ற மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்கள் சேரலாம். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 18க்குள்ளும்,கல்லுாரி விடுதிகளுக்கு ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஜாதி, பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. சேரும்போது கொண்டுவர வேண்டும்.
முகாம் வாழ் இலங்கைதமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.