/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் எஸ்.பி.,
/
கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் எஸ்.பி.,
ADDED : ஜூன் 13, 2025 11:36 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து சந்தீஷ் எஸ்.பி., ஆலோசனை நடத்தினார்.
'உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி.,' என்ற திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு எஸ்.பி., சந்தீஷ் நேரடியாக சென்று சட்ட ஒழுங்கு பிரச்னைகள், மக்களின் குறைகளை கேட்டு அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து வருகிறார்.
சாயல்குடி அருகே கடுகு சந்தைசத்திரம் கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பதன் அவசியம் பற்றி சந்தீஷ் எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.
கிராம இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு மற்றும் கல்லுாரி மேற்படிப்பிற்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார். இளைஞர்கள் சமூக வலை தளங்களில் வாள் போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
பொதுமக்களிடம் நட்பு பாராட்டும் விதமாக இனிப்பு வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, மேல்நிலை பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பண வெகுமதியும் வழங்கி பாராட்டினார்.