/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்கங்களில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்
/
கூட்டுறவு சங்கங்களில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்
கூட்டுறவு சங்கங்களில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்
கூட்டுறவு சங்கங்களில் நாளை சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம்
ADDED : பிப் 29, 2024 11:19 PM
ராமநாதபுரம், - ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பண்ணை சாரா கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நாளை (மார்ச் 2ல்) நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமார் கூறியதாவது:
கூட்டுறவு சங்கங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக்கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்ளிட்டவைகளில் வாங்கியுள்ள வாணிப கடன், பத்திர ஈட்டுக்கடன், வீடு கட்டும் கடன், வீட்டு அடமானக் கடன், சுயஉதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கடன்களில் 2022 டிச.31ல் கடனை திரும்பி செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிந்து நிலுவையில் உள்ள அனைத்து பண்ணைசாராக்கடன் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
நிலுவைத் தொகையில் 25 சதவீதம் தொகைக்கு சாதாரண வட்டியும், இதர செலவினங்கள் தள்ளுபடி செய்யப்படும். இந்த அரசாணை செப்.2024 வரை அமலில் இருக்கும். மேலும் விபரங்களுக்கு சரக துணைப் பதிவாளர்கள்ராமநாதபுரம் 93849 26637, பரமக்குடி 99442 58851 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

