/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி கோயிலுக்கு இன்று ஸ்ரீரங்கம் ஜீயர் வருகை 60 நாட்கள் சிறப்பு பூஜை நடக்கிறது

ADDED : ஜூலை 05, 2025 02:29 AM
திருப்புல்லாணி:ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் ஜீயர் வராக மஹா தேசிகன் சுவாமிகள் இன்று(ஜூலை 5) மாலை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வருகிறார்.
இங்கு தொடர்ந்து 60 நாட்கள் தங்கி சிறப்பு பூஜைகள் செய்கிறார்.
ஆனி பவுர்ணமி முதல் ஆவணி பவுர்ணமி வரை 60 நாட்கள் ஹிந்து மத துறவியர்கள் அனைவரும் ஒரே ஊரில் தங்கி இருந்து உலக நன்மைக்கான பூஜைகள், யாக வேள்விகள், சதுர் மாஸ்ய சங்கல்ப சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இந்த ஆண்டு இந்த விரதம் ஜூலை 10ல் துவங்கி செப்.,7ல் நிறைவடைகிறது.
இந்த விரதம் மேற்கொள்வதற்காக வராக மஹா தேசிகன் சுவாமிகள் திருப்புல்லாணி வருகிறார்.
60 நாட்களும் திருப்புல்லாணியில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்கிறார். ஜூலை 10ல் காலை சதுர் மாஸ்ய சங்கல்பம் துவங்குகிறது.
அன்று மாலை திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்கிறார்.ஜூலை 13ல் சேதுக்கரை கடலில் புனித நீராடுகிறார். திருப்புல்லாணி ஆண்டவன் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்து தினமும் காலை 8:00 மணிக்கு பூஜை செய்கிறார்.
இந்த 60 நாட்களில் சுவாமியை வணங்கி வழிபடுவது சிறப்பானது என்பதால் நாடு முழுவதும் இருந்து ஏராளமான சீடர்கள் வருகை தர உள்ளனர்.