/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் சுற்றிலும் தேங்கும் தண்ணீர்
/
அரசு மகளிர் கல்லுாரியில் சுற்றிலும் தேங்கும் தண்ணீர்
அரசு மகளிர் கல்லுாரியில் சுற்றிலும் தேங்கும் தண்ணீர்
அரசு மகளிர் கல்லுாரியில் சுற்றிலும் தேங்கும் தண்ணீர்
ADDED : ஜன 27, 2024 04:51 AM

பரமக்குடி : பரமக்குடி அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடியில் அழகப்பா பல்கலை மாதிரி உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 2012ல் துவக்கப்பட்டது. தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள கண்மாய் இடத்தில் நிரந்தர கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. இந்நிலையில் 2022ல் துவங்கி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியாக மாற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் 2023 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
முக்கியமாக சுற்றுச்சுவர் கட்டும் பணி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரைகுறையாக நிற்பதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளனர்.
இதனால் சமூக விரோதிகள் கல்லுாரி இடத்தை பயன்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது.
மேலும் வேந்தோணி கால்வாய் பகுதியில் தண்ணீர் வரும் சூழலில் ஒவ்வொரு முறையும் கல்லுாரியை தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது.
இதனால் மாணவிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. தொடர்ந்து பஸ் வசதி, ரோடு வசதி, மின் விளக்கு என அமைப்பதுடன் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

