/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் 1.13 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

ADDED : பிப் 29, 2024 10:25 PM
ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 3ல் நடைபெறும் சிறப்பு முகாமில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 917 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறியதாவது:
மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடக்கிறது. பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
குறிப்பாக வேறு மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், நரிக்குறவர், குடியிருப்புகள், இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்புப் பகுதி ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என 1256 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதுதவிர நடமாடும் குழுக்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் போலியோ முகாம்கள் அமைத்தும் காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை வழங்கப்படும்.
எனவே இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் இந்த முகாமில் சொட்டு மருந்து கொடுக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.