/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்
/
ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2024 12:09 AM

ராமநாதபுரம்: மத்திய அரசை கண்டித்தும், வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ராமநாதபுரம், தொண்டியில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாட்டில் 1991ல் கொண்டு வரப்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் படி, இந்தியா சுதந்திரம் பெற்ற போது எந்தெந்த வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்தனவோ அதே போல தொடர உத்தரவாதம் அளித்தது.
அதற்கு மாறான நடவடிக்கையில் மத்திய பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தில்அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஊர்வலத்தின் நோக்கம் குறித்து பேசினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
---------* தொண்டி பாவோடி மைதானத்தில் ராமநாதபுரம் வடக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் செய்யது அலி தலைமை வகித்தார்.
தொண்டி, எஸ்.பி.பட்டினம், மங்களக்குடி, நம்புதாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

