/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
/
அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
ADDED : ஜன 26, 2024 05:18 AM

முதுகுளத்துார்: -பொக்கனாரேந்தலுக்கு அரசு பஸ் முறையாக வராததால் அந்த பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுகுளத்துார் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழில். கிராமத்திற்கு அத்தியாவசிய வேலைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் செல்வதற்காக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பஸ் முறையாக வரவில்லை. இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டனர். மீண்டும் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய கவுன்சிலர் அர்ஜுனன் கூறுகையில், பொக்கனாரேந்தல் கிராமத்திற்கு அரசு பஸ் முறையாக வராததால் மாணவர்கள், கர்ப்பிணிகள் உட்பட கிராம மக்கள் 5 கி.மீ., நடந்து சென்று அணிக்குருந்தான் முக்குரோடு மற்றும் உலையூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து இனி வரும் நாட்களில் முறையாக இயக்க வலியுறுத்தி பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.
போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனிவரும் நாட்களில் அரசு பஸ் முறையாக இயக்கப்படும் என்று கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர். 2 மணி நேரத்திற்கும் மேல் அரசு பஸ் சிறை பிடிக்கப்பட்டது.

