/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்சிப் பொருளான உயர்மின் கோபுரம்
/
காட்சிப் பொருளான உயர்மின் கோபுரம்
ADDED : ஜூன் 07, 2025 10:48 PM

முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிசேரி கிராமத்தில் உயர்மின் கோபுரம் பழுதாகி விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
கீழக்கன்னிசேரி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார்-- பரமக்குடி ரோடு கீழக்கன்னிசேரி பயணியர் நிழற்குடை அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டது.
இப்பகுதி முழுவதும் வெளிச்சமாக இருந்து வந்தது. தற்போது முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் உயர்மின் கோபுரம் எரியாமல் உள்ளது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே காட்சிப்பொருளாக உள்ள உயர்மின் கோபுரத்தை மராமத்து பணி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.