/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கல் - சாயல்குடி வரை பல்லாங்குழியான சாலை
/
சிக்கல் - சாயல்குடி வரை பல்லாங்குழியான சாலை
ADDED : ஜன 11, 2024 04:10 AM
சாயல்குடி : துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து சாயல்குடி 65 கி.மீ., உள்ளது.
கடந்த 2010ல் அமைக்கப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பராமரிப்பு பணிகளுக்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்ட நிலையில் கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான வழித்தடமான சிக்கல் முதல் சாயல்குடி வரை உள்ள பகுதிகளில் குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: சிக்கல், கீழச்செல்வனுார், மேலச்செல்வனுார், பூப்பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக சாலை சேதமடைந்துள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் பயணிக்கும் இச்சாலையில் சேதமடைந்த பகுதியில் டூவீலர் ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

