/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடை, அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு
/
கடை, அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு
கடை, அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு
கடை, அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு
ADDED : பிப் 24, 2024 06:04 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் சூப்பர் மார்க்கெட், வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவற்றில் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டணம்காத்தான் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அப்பகுதியில் பழைய செக்போஸ்ட் அருகே சூப்பர் மார்க்கெட் கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.60ஆயிரத்தை திருடினர்.
அதே கட்டடத்தின் மேல்தளத்தில் இருந்த வக்கீல் முத்து துரைசாமியின் அலுவலகம் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.