
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் வள்ளலார் இறையருள் சேவை அறக்கட்டளை சார்பில் தைப்பூசத்தை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல் நடந்தது. முன்னதாக வள்ளலாருக்கு 18 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நடத்தினர். பின்னர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

