ADDED : ஜன 17, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : -பரமக்குடி ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
இப்பள்ளியில் பொங்கல் விழா, விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலகர் முருகம்மாள் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வக்கீல் பூமிநாதன், கவுன்சிலர் பாக்கியம் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் சகாயராஜ் வரவேற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி
முன்னாள் மாணவர் மன்ற நிர்வாகிகள் மைக்கேல் வின்சென்ட் லூயிஸ், ஆசிரியர் மன்ற செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.

