/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தென்னந்தோப்பு பிக்னிக் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
/
தென்னந்தோப்பு பிக்னிக் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
ADDED : பிப் 24, 2024 05:43 AM
கீழக்கரை : பொதுவாக சுற்றுலா செல்வதற்கு மலைப்பிரதேசங்கள், கடற்கரை உள்ளிட்ட பிரசித்த பெற்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
உள்ளூரில் யாருக்கும் புலப்படாமல் நிசப்தமான பிக்னிக் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது. கீழக்கரை மன்னார் வளைகுடா பகுதியை ஒட்டிய காஞ்சிரங்குடி, மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.
பசுமையான தென்னந்தோப்புகள் மற்றும் பழ மரங்களுக்கு மத்தியில் நீச்சல் குளம் அமைத்து பம்பு செட்டில் தண்ணீர் ஏற்றுகின்றனர். காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை ஒரு நாள் பிக்னிக்கிற்கு கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விபரம் அறிந்தோர் இங்கு வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பிக்னிக் வந்த சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. அவற்றில் பிக்னிக் நடத்தும் வகையில் முன்கூட்டியே தொடர்புடைய தென்னந்தோப்பு உரிமையாளர்களிடம் முன் அனுமதி வாங்கி குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்து நீச்சல் குளத்தில் குளித்து மகிழலாம்.
இதில் உள்ள தண்ணீர் வீணாகாது. அவை நேரடியாக தென்னை மரங்களுக்கு பாய்ச்சப்படுகிறது. அசைவ உணவு வகைகள் சமைத்து சாப்பிட்டு செல்லும் வகையில் இடவசதிகள் உள்ளன. பெரும்பாலானோர் தெரிந்த நண்பர்களுக்கு பிக்னிக் வருகை இலவசமாகவும் தருகின்றனர்.
புதியதாக பிக்னிக் வருவோருக்கு ரூ.1500 முதல் ரூ.3000 வரை கட்டணம் வசூலித்து வருமானம் ஈட்டுகின்றனர். பிக்னிக் போகலாம் என்றால் அலாதியான சந்தோஷமாக உள்ளது என்றனர்.