sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் n மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில்... n வெளிநாட்டு பறவைகளை ரசிக்க வழியில்லை

/

சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் n மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில்... n வெளிநாட்டு பறவைகளை ரசிக்க வழியில்லை

சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் n மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில்... n வெளிநாட்டு பறவைகளை ரசிக்க வழியில்லை

சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் n மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில்... n வெளிநாட்டு பறவைகளை ரசிக்க வழியில்லை


ADDED : பிப் 05, 2024 11:23 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி,- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப்பறவைகள் குவியும் நிலையில் அவற்றை பார்த்து ரசிப்பதற்கான வசதிகளும்வழிகாட்டியும் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

தமிழகத்தில் உள்ள குறிப்பிடத் தகுந்த சரணாலயங்களில் சிறப்பு வாய்ந்ததாக மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. 593.6 ஏக்கரில் விரிந்துள்ள மேலச்செல்வனுார் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. 1998ம் ஆண்டு தமிழக அரசால் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

பருவமழை துவங்கிய பின் அக்., நவ., மாதங்களில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பறவை இனங்கள் வாலிநோக்கம் முகத்துவாரங்களிலும் அதிலிருந்து பெரும்பாலான பறவைகள் மேலச்செல்வனுார் கண்மாயில் உள்ள நாட்டு கருவேலம் மரங்களில் தஞ்சம் அடைகின்றன.

பருவ நிலை சீதோஷ்ண நிலை காரணமாக மேலச்செல்வனுார் கண்மாய் பகுதிகளில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்கான தகவமைப்பு உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் 170 விதமான பறவையினங்கள் இங்குள்ள மரங்களில் அமர்ந்து முட்டையிட்டு கூடுகட்டி குஞ்சு பொரித்து அழைத்துச் செல்வது வழக்கம்.

கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் கண்மாயில் நீர் வரத்து இல்லாததால் பறவைகளின்றி வெறிச்சோடியது. கடந்த நவ., டிச., மற்றும் ஜன., மாதங்களில் பெய்த மழையால் மேலச்செல்வனுார் கண்மாய் முழுவதும் நிரம்பியது.

வனத்துறையின் பராமரிப்பில் உள்ள மேலச்செல்வனுார் கண்மாயில் பறவைகள் குறித்த விபரங்களோ, அவை குறித்து தெரிவிக்க உரிய வழிகாட்டி இல்லாததால் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மேலச்செல்வனுார் விவசாயி சிதம்பரம் கூறியதாவது:

மேலச்செல்வனுார் கிராமத்தின் அடையாளமாக பறவைகள் சரணாலயம் உள்ளது. இதனை பராமரிக்க வேண்டிய வனத்துறையினர் மெத்தனம் காட்டுகின்றனர். பெரும்பாலும் இங்குள்ள தகவல் மையம் அலுவலகம் பூட்டியே உள்ளது. பணியாளர்கள் இருப்பதில்லை.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பறவைகளின் அழகை பார்த்து ரசிப்பதற்காக இரும்பால் அமைக்கப்பட்ட பார்வையாளர் மாடம் சேதமடைந்துள்ளதால் யாரும் அங்கு செல்வதில்லை. பறவைகள் வழிகாட்டி மையத்தின் மேல் மாடியில் உள்ள மாடத்தில் நின்று ஆயிரக்கணக்கான பறவைகளை கண்டு ரசிக்கும் இடத்தின் கூரை சேதமடைந்துள்ளது.

அதனை பராமரிக்காமல் ஆண்டுக்கணக்கில் விட்டுள்ளனர். கட்டடத்திற்கு பெயின்ட் அடிக்காமல் பொலிவிழந்துள்ளது. படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. பறவைகள் குறித்த விழிப்புணர்வை காலை மற்றும் மாலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஏற்ப சீசன் காலங்களில் அவற்றை விளக்கி சொல்வதற்கு கைடுகள் இல்லாத நிலை உள்ளது.

எப்போதும் சீசன் காலங்களில் மீன் குஞ்சுகளை விடுவார்கள். நடப்பாண்டில் மீன் குஞ்சுகளையும் விடாமல் உள்ளனர். எனவே வனத்துறையினர் உரிய முறையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us