/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே அழிவின் விளிம்பில் நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம்
/
பரமக்குடி அருகே அழிவின் விளிம்பில் நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம்
பரமக்குடி அருகே அழிவின் விளிம்பில் நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம்
பரமக்குடி அருகே அழிவின் விளிம்பில் நயினார்கோவில் வாசுகி தீர்த்த குளம்
ADDED : ஜூன் 21, 2025 11:27 PM

அழிக்கப்படும் ஆயிரம் ஆண்டு கலாச்சாரம்
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளம் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில் ஆயிரம் ஆண்டு கால கலாச்சாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். இதுபோல் ஒரு ஊரில் புராதான கோயில் இருக்கும் சூழலில் அதனை ஒட்டி அனைத்து வகையான வியாபாரங்களும் செழித்து மக்கள் வாழ வழிவகுக்கும்.
இந்நிலையில் பரமக்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் அனைத்து வகையான தோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்று விளங்குகிறது.
இங்கு ஆண்டு முழுவதும் மக்கள் வந்து செல்லும் நிலையில், விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த தானியங்களை இன்றளவும் செலுத்தி வருகின்றனர். குழந்தை பேறு வேண்டுவோர் இக்கோயிலில் குழந்தையை விட்டு ஏலம் எடுக்கும் முறையும் தொடர்கிறது.
இச்சூழலில் கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடிய பின்னரே அனைத்து வகையான பரிகாரங்களையும் மேற்கொள்வது வழக்கம்.
ஆனால் சில ஆண்டுகளாக குளத்தை சுற்றி உள்ளவர்கள் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கழிவு நீர் விடும் பகுதியாக மாற்றி உள்ளனர். மேலும் படித்துறைகள் அனைத்தும் உடைந்து வீணாகி ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கருவேல மரங்கள் வளர்ந்து சிதைந்துள்ளது.
குளத்தை சீரமைக்க போகிறோம் என்ற வகையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் திராவிட கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பல லட்சங்கள் மதிப்பில் திட்டங்களை மட்டும் தீட்டி பக்தர்களுக்கு ஆசை வார்த்தை கூறி செல்கின்றனர்.
ஆனால் எந்த பயனும் இன்றி குளத்தை பார்த்து பக்தர்கள் மனம் வெதும்பி உள்ளனர்.
ஆகவே பிரதான திருத்தலங்களை காக்கும் நோக்கில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.