/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாக்காளர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
வாக்காளர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 26, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானையில் தேசிய வாக்காளர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை தாசில்தார் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். பஸ்ஸ்டாண்ட், கீழ ரதவீதி, மேல ரதவீதி என முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர். இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, தேர்தல் துணை தாசில்தார் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

