/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெய்வயலில் ரூ.84.35 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம்
/
நெய்வயலில் ரூ.84.35 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம்
நெய்வயலில் ரூ.84.35 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம்
நெய்வயலில் ரூ.84.35 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம்
ADDED : பிப் 05, 2024 11:33 PM
திருவாடானை- திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சியில் ரூ.84.35 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.
திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சியில் நெய்வயல், அதங்குடி, நெட்டேந்தல், நாச்சியேந்தல், அணிக்கி, மணப்புஞ்சை, வலையன்வயல், இலுப்பக்குடி, சீர்தாங்கி, மடத்தேந்தல் போன்ற கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக நெய்வயல் கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் கட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.60 லட்சம், மாநில நிதியில் ரூ.24.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது கட்டடம் கட்டும் பணிகள் நடக்கிறது.
நெய்வயல் ஊராட்சி தலைவர் ஆசைராமநாதன் கூறியதாவது: கட்டட பணி முடியும் தருவாயில் உள்ளது. நெய்வயல் ஊராட்சி, சுற்றுவட்டார ஊராட்சிகளை சேர்ந்த கிராமத்தினர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறைந்த வாடகையில் இங்கு நடத்த பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கட்டடம் அமையும் என்றார்.