/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல் ரோட்டில் நடந்து தான் கல்லூரிக்கு போக முடியும்: தடுமாறும் மாணவர்கள்
/
கல் ரோட்டில் நடந்து தான் கல்லூரிக்கு போக முடியும்: தடுமாறும் மாணவர்கள்
கல் ரோட்டில் நடந்து தான் கல்லூரிக்கு போக முடியும்: தடுமாறும் மாணவர்கள்
கல் ரோட்டில் நடந்து தான் கல்லூரிக்கு போக முடியும்: தடுமாறும் மாணவர்கள்
ADDED : ஜன 10, 2024 12:02 AM

பரமக்குடி : -பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி ரோடு சேதமடைந்துள்ளதால் கல் ரோட்டில் மாணவர்கள் தடுமாறும் நிலை உள்ளது.
பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக செயல்படுகிறது.
இங்கு 2000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அழகப்பா பல்கலை அளவில் ரேங்கிங் பட்டியலில் 10 இடத்திற்குள் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் கல்லுாரியில் அடிப்படை வசதிகளில் குறைபாடு காணப்படுகிறது.
பஸ்ஸ்டாண்டில் இருந்து கல்லுாரிக்கு செல்ல கிட்டத்தட்ட 2 கி.மீ., உள்ள நிலையில் கல்லுாரி நேரங்களில் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது.
இதனால் தினம் தினம் பாதயாத்திரை பயணம் மேற்கொள்கின்றனர்.
மேலும் மதுரை நெடுஞ்சாலையை ஒட்டி கல்லுாரி செல்லும் பாதை துவங்கி ஒட்டுமொத்தமாக மழை நேரங்களில் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.
இச்சூழலில் கடந்த சில மாதங்களாக தேங்கி நின்ற தண்ணீருக்கு மத்தியில் நடந்து சென்ற மாணவர்கள் தற்போது கல் ரோட்டில் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்லுாரி அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மேலும் வீடு இடித்த கற்களை கொண்டு சில நேரங்களில் சீர் செய்துள்ளனர்.
இதனால் மாணவர்கள் உட்பட பேராசிரியர்களும் தடுமாறி செல்கின்றனர். டூவீலர்களில் செல்வோர் வழுக்கி விழுந்து காயங்களும் ஏற்படுகின்றன.
ஆகவே கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி ரோட்டை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

