/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
போதையில் போலீசாரிடம் ரகளை அ.தி.மு.க., பஞ்., தலைவர் கைது
/
போதையில் போலீசாரிடம் ரகளை அ.தி.மு.க., பஞ்., தலைவர் கைது
போதையில் போலீசாரிடம் ரகளை அ.தி.மு.க., பஞ்., தலைவர் கைது
போதையில் போலீசாரிடம் ரகளை அ.தி.மு.க., பஞ்., தலைவர் கைது
ADDED : ஜன 10, 2024 01:13 AM
கலவை:ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. -- பஞ். தலைவர் உமாபதி 53. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு திமிரி - கலவை சாலையில் தன் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்தார்.
திமிரி எஸ்.எஸ்.ஐ. இளங்கோ தலைமையிலான போலீசார் அங்கு சென்றவுடன் உமாபதி தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து தப்பினர்.
உமாபதியை அங்கிருந்து புறப்பட்டு செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர்.
ஆனால் அவர் ஏற்க மறுத்து போலீசாரை தகாத வார்த்தையில் திட்டினார். எஸ்.ஐ. அருண்குமாரையும் ஆபாசமாக திட்டி 'உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள்' என கூறினார். திமிரி போலீசார் உமாபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.