/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
/
ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
ADDED : ஜன 10, 2024 01:18 PM
காவேரிப்பாக்கம் : காவேரிப்பாக்கம் அருகே, ேஹாமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமத்தில் ஒருவர் மருத்துவம் படிக்காமல், நோயாளிகளை பார்த்து வருவதாக, மாவட்ட இணை மருத்துவர் நிவேதிதாகவுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வாலாஜா அரசு மருத்துவமனை டாக்டர் தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருந்தாளுனர் வேலு, வி.ஏ.ஓ., மஞ்சுளா, மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் நேற்று, சுமைதாங்கி கிராமம் சென்று தனியார் கிளீனிக்கை சோதனை செய்தனர்.அது ஜெயபாலன், 70, என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் ேஹாமியோபதி படித்து விட்டு தன் வீட்டிலேயே, 35 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மருந்துகளை பறிமுதல் செய்து, போலி டாக்டர் ஜெயபாலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

