/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரோபோடிக் அர்த்ரோபிளாஸ்டி மையம் குறிஞ்சி மருத்துவமனையில் தொடக்கம்
/
ரோபோடிக் அர்த்ரோபிளாஸ்டி மையம் குறிஞ்சி மருத்துவமனையில் தொடக்கம்
ரோபோடிக் அர்த்ரோபிளாஸ்டி மையம் குறிஞ்சி மருத்துவமனையில் தொடக்கம்
ரோபோடிக் அர்த்ரோபிளாஸ்டி மையம் குறிஞ்சி மருத்துவமனையில் தொடக்கம்
ADDED : மே 11, 2025 03:08 AM
சேலம்,சேலம், 5 ரோடு அருகே உள்ள குறிஞ்சி மருத்துவமனையின், டி.ஜெ., ரோபோடிக் அர்த்ரோபிளாஸ்டி மையம் தொடக்க விழா, மாமாங்கம் ரேடிசன் ஓட்டலில் நேற்று நடந்தது. மருத்துவமனை சேர்மன் பூங்கோதை, நிர்வாக இயக்குனர் மணிமாறன், தமிழ்நாடு எலும்பியல் சங்கத்தலைவர் மணிகண்டன், பட்டிமன்ற பேச்சாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர், குத்துவிளக்கு ஏற்றி, மையத்தை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து மணிமாறன் கூறுகையில், ''ரோபோ தொழில்நுட்பம் இணைந்து, தனித்துவ மிக துல்லியமான முழங்கால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். குறைந்த வலியில் விரைவான நிவாரணம் பெற முடியும். தொடக்க விழாவையொட்டி முதல் ஒரு மாதத்துக்கு கூடுதல் கட்டணங்கள் இல்லாமல், ரோபோடிக் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைவர் பாஸ்கரன், அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பைய்யா, ராஜராஜன் கல்வி, கலாசார சங்க தலைவர் துரைராஜ், சேலம் முன்னாள் மேயர் சூடாமணி, விஜய் வித்யாலயா கல்வி நிறுவன தாளாளர் இளங்கோவன், எஸ்.ஆர்.கே., கல்வி நிறுவன தாளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

