/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறப்பு
/
மேட்டூர் கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறப்பு
ADDED : ஜூலை 31, 2024 07:34 AM
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் பாசனத்துக்கு, 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆண்டுதோறும் ஆக., 1 முதல் டிச., 15 வரை, 137 நாட்கள், 9.5 டி.எம்.சி., நீர் திறக்-கப்படும். இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால், கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை மேட்டூர் அணை நீர்மட்டம், 119.5 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரு நாள் முன்னதாக, நேற்று மாலை அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்-வாயில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. பாசன நீரை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி திறந்து வைத்தார். மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, சேலம் வடக்கு தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேட்டூர் தொகுதி, பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், கால்வாய் பாசன செயற்பொறியாளர் சிவகுமார், கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்-கேற்றனர்.
தொடர்ந்து அதிகாரிகள், கால்வாயில் வெளி-யேறிய நீருக்கு, மலர்களை துாவி வணங்கினர். முதல்கட்டமாக வினாடிக்கு, 300 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் விரைவில் நீர்திறப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.