/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரேக்ளாவுக்கு குதிரைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்
/
ரேக்ளாவுக்கு குதிரைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்
ரேக்ளாவுக்கு குதிரைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்
ரேக்ளாவுக்கு குதிரைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்
ADDED : ஜன 17, 2024 10:46 AM
ஆத்துார்: ரேக்ளா போட்டிக்கு, ஆத்துார் பகுதியில் குதிரைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.
தமிழக வீர விளையாட்டுகளில், ஜல்லிக்கட்டுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது குதிரை ரேக்ளா போட்டியாகும். குதிரைகளை வளர்த்து, அதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்படும் வண்டிகளில் பூட்டி, போட்டியில் கலந்து கொள்வர். ஆத்துாரில் பொங்கல் பண்டிகையில், குதிரை ரேக்ளா போட்டி நடந்து வந்தது. ஆத்துார், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், ரேக்ளா போட்டிக்கு வளர்க்கப்படும் குதிரைகள், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் கொண்டு சென்று, பரிசுகளை பெற்று வருகிறது.
தற்போது, சேலம் - சென்னை, ஆத்துார் - பெரம்பலுார் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில், இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். வசிஷ்ட நதியில் தண்ணீர் செல்வதால், நரசிங்கபுரம் தடுப்பணை, கல்லாநத்தம் ஏரி உள்ளிட்ட தடுப்பணை பகுதிகளில், போட்டியில் பங்கேற்கும் குதிரைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, குதிரை உரிமையாளர் ரவி கூறுகையில், ''தமிழக அரசு ரேக்ளா போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும். குதிரைகளுக்கு உணவு, பயிற்சி என கவனிப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான், குதிரைகளால் பந்தய துாரத்தை களைப்பின்றி கடக்க முடியும்,'' என்றார்.

