ADDED : மார் 16, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு கல்லுாரியில் ஆண்டு விழா
சேலம்:சேலம் அரசு கலைக்கல்லுாரியில் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் செண்பகலட்சுமி தலைமை வகித்தார். அதில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த, 210 மாணவ, மாணவியருக்கு, பாராட்டு சான்றிதழ், பரிசுகளை, சேலம் எம்.பி., செல்வகணபதி வழங்கினார். நடப்பு கல்வியாண்டில் ஓய்வு பெறும், 7 பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. கணினி துறை தலைவர் முருகேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.