/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு ஒத்துழைக்க வலியுறுத்தல்
/
மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு ஒத்துழைக்க வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு ஒத்துழைக்க வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு ஒத்துழைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 03, 2025 01:16 AM
சேலம், மாற்றுத்திறனாளிகள் மேம்பாடுக்காக, தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை, மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே சென்று சேரும் வகையில், உலகவங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, இல்லம்தோறும் சென்று அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களின் முழு விபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நகர்புறம், ஊரகப்பகுதிகளில் முன்களப்பணியாளர்கள் மூலம், வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி மாவட்டம் முழுதும் நடத்தப்படுகிறது.
ஜூன், 2ல் தொடங்கி, ஆகஸ்டு மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள், தங்கள் வீட்டுக்கு வரும் முன்களப்பணியாளருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இத்தகவலை, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.