ADDED : செப் 29, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பிள்ளை:சேலம் சிவ சொந்தங்கள் உழவாரப்பணி குழு தலைவர் சிவ அசோகன் தலைமையில், 150 சிவனடியார்கள், இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர் கோவிலில் நேற்று காலை, 9:30 மணிக்கு, உழவாரப்பணி மேற்கொண்டனர்.
அவர்கள் கோவில் செல்லும் சாலை அருகே உள்ள புதர், காளியம்மன் கோவில் அருகே உள்ள செடி, கொடிகளை அகற்றினர். சித்தர், காளியம்மன், முருகன் உற்சவர் சிலைகள், நந்தி மண்டபம், குளத்தை சுத்தப்படுத்தினர். மாலை வரை, இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

