/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜார்க்கண்டை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்
/
ஜார்க்கண்டை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 31, 2024 07:32 AM
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு, காவேரி பீக், கராரா எஸ்டேட்டில் இரவு காவலாளியாக பணிபுரிந்தவர் கொண்டாபாகன், 40. ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சுதிஹேன்ஸ், 36. இருவரும், 2020 செப்., 29ல் வீட்டில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்-தனர்.இதுதொடர்பாக ஏற்காடு போலீசார், ஜார்க்-கண்ட்டை சேர்ந்த கயரபோத்ரா, புத்ராம், முச்-சிரே, குள்ளேசமத் ஆகியோரை தேடினர். இந்நி-லையில், 2020 அக்., 20ல் கயரபோத்ரா, 41, காவேரி பீக் எஸ்டேட்டில் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணையில், கொலை வழக்கில் சிக்கியது குறித்து கூட்டாளிகளுக்குள் தகராறு ஏற்பட்டதும், அதில் ஆத்திரம் அடைந்த மற்ற, 3 பேரும், கயர போத்ராவை கொன்றதும் தெரிய-வந்தது. இதில் புத்ராம், 30, முச்சிரே, 31, குள்ளேசமத், 30, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அதில், 3 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி நேற்று உத்தரவிட்டார்.