/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு
/
ஆத்துார் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு
ADDED : ஜூலை 18, 2024 02:16 AM
ஆத்துார்: மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் பணம், காணிக்கை பொருட்களை திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கல்பகனுார் புதுார் கிரா-மத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவர் கோவிலை பராமரிப்பு செய்து வருகிறார். நேற்று, ஆடி பிறப்பையொட்டி கோவிலை சுத்தம் செய்வதற்கு வந்த போது, கோவில் வெளிப்புற கதவு பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த ஒரு கிராம் தாலி மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு வெளிப்புற பகுதியில் வீசிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
இந்த உண்டியலில், 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், காணிக்கை பொருட்கள் இருந்ததாகவும், அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருட்டுபோனது குறித்தும், ஆத்துார் ஊரக போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, கோவிலில் உண்டியல் உடைத்த மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.