/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்
/
தலைமை ஆசிரியரை தாக்கிய பள்ளி சமையலரின் கணவர்
ADDED : ஜூலை 31, 2024 12:59 AM
இடைப்பாடி:சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், வாழகுட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குமார், 47. அங்கு சமையலராக சுதா, 31, பணிபுரிகிறார். இவரது கணவர் பாலமுருகன், 45. நேற்று காலை, 10:00 மணிக்கு பள்ளியில் புகுந்து, குமாரை தாக்கியுள்ளார். காயமடைந்த குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக பள்ளிக்கு சென்று கொங்கணாபுரம் போலீசார் விசாரித்தனர். அப்போது வழக்கு வேண்டாம் என, குமார் கூறியுள்ளார். பள்ளியில் நடந்த சம்பவம் என்பதால் புகார் கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, ஆசிரியர் புகார் கொடுத்தார்.
போலீசார் கூறுகையில், 'கள்ளத்தொடர்பு வைத்துள்ளீரா என கேட்டு பாலமுருகன் தாக்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.