/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைலாசநாதர் கோவிலில் 2ம் நாள் தேரோட்டம்
/
கைலாசநாதர் கோவிலில் 2ம் நாள் தேரோட்டம்
ADDED : ஜன 27, 2024 04:23 AM
தாரமங்கலம்: தைப்பூசத்தையொட்டி தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், 3 நாள் தேரோட்டம், நேற்று முன்தினம் தொடங்கியது.
அதில் தேர்கள், நிலையத்திலிருந்து அண்ணா சிலை பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, 2ம் நாள் தேரோட்டம் தொடங்கியது. அதில் சிறு தேரில் வரதராஜ பெருமாள், பெரிய தேரில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிகள் எழுந்தருளிய நிலையில், இரு தேர்களையும் திரளான பக்தர்கள் வடம்பிடித்து, 'அரோகரா' கோஷம் முழங்க இழுத்துச்சென்றனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேர்கள் நிலை நிறுத்தப்பட்டன.
முன்னதாக தேரோட்டத்தின்போது சிறுவர்கள் சிலம்பாட்டம், இளைஞர்களின் கிராமிய ஆட்டம், தீச்சட்டி கரகம் எடுத்தபடி
பக்தர்கள், செண்டை மேளம் முழங்க சிவ தொண்டர்களும் ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தேர்கள், அதன் நிலையத்தை அடையும்.

