ADDED : ஜூன் 02, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லியில், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், ஜாதி, பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணிகளில் வருவாய், நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம், பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்த, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளின், 10 கொடிக்கம்பங்களை, வருவாய்த்துறையினர் அகற்றினர். அதேபோன்று கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், 37 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதாக, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.