/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் 75வது குடியரசு தினம் கொண்டாட்டம்
/
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் 75வது குடியரசு தினம் கொண்டாட்டம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் 75வது குடியரசு தினம் கொண்டாட்டம்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் 75வது குடியரசு தினம் கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2024 04:22 AM
சேலம்: சீரகாபாடி விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம், நுண்கலை அமைப்பு மூலம், 75வது குடியரசு தின விழா கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. துறை டீன் செந்தில்குமார், ௧௧வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவ படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடியை ஏற்றினார். ௭௫வது குடியரசு தினத்தை சிறப்பிக்கும்படி கல்லுாரி வளாகத்தில், 75 அடியில் தேசிய லச்சினை வரையப்பட்டு மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து
வடிவமைப்பினை ஏற்படுத்தினர்.
தவிர நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், 'உன்னத் பாரத் அபியான்' திட்டத்தில் தத்தெடுக்கப்பட்ட கிராமமான சீரகாபாடியில் நடந்த கிராம சபா கூட்டத்தில், மக்களின் தேவை குறித்து கணக்கிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை, நுண்கலை அமைப்பின் ஆலோசகர் உமா மகேஷ்வரி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், டாக்டர் ஜெயபாலன், மெய்பிரபு செய்திருந்தனர்.