/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் எடுத்து செல்ல புது முறை
/
கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் எடுத்து செல்ல புது முறை
ADDED : ஜூன் 15, 2025 02:27 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட குவாரிகளில் இருந்து எடுத்து செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்த, இணைய வழியில் 'பல்க் பர்மிட்' வழங்கும் முறை செப்.,-2024 முதலும், 'இ-பர்மிட்' வழங்கும் முறை கடந்த ஏப்., முதல் அமலாகி உள்ளது.
கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளர், முகவர்கள் கனிம இருப்பு கிடங்கு பதிவு சான்று பெற வேண்டும். கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் முதலியவற்றை உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று எடுத்து செல்ல வேண்டும். புதிதாக பதிவு செய்யப்படும் கிரஷர், இருப்பு கிடங்குகளின் உரிமையாளர்கள், https://mimas.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து, அனுமதி சீட்டு பெற வேண்டும். இம்முறை கடந்த, 12 முதல் அமலாகி, மின்னணு முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். இதில்லாமல் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் எடுத்து செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.