/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தைப்பூச திருவிழாவையொட்டி கூடிய பாரம்பரிய மாட்டுச்சந்தை
/
தைப்பூச திருவிழாவையொட்டி கூடிய பாரம்பரிய மாட்டுச்சந்தை
தைப்பூச திருவிழாவையொட்டி கூடிய பாரம்பரிய மாட்டுச்சந்தை
தைப்பூச திருவிழாவையொட்டி கூடிய பாரம்பரிய மாட்டுச்சந்தை
ADDED : ஜன 28, 2024 11:08 AM
வீரபாண்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நாட்டு மாட்டுச்சந்தை நேற்று முன்தினம் தொடங்கியது. சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர், நாட்டுப்பசு மாடுகள், நாட்டு காளை மாடுகளை கொண்டு வந்தனர். 2ம் நாளான நேற்றும் வியாபாரம் நடந்தது. இன்றுடன் சந்தை முடிகிறது.
இதுகுறித்து, சந்தை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'கம்பீர காங்கேயம் காரி, ஓசூர் வட கத்தி ரக மாடுகள் முதல் குட்டை ரக பர்கூர் மாடுகளின் வரத்து அதிகரித்தது.
தரத்துக்கு ஏற்ப ஜோடி, 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. மேலும் மூக்கணாங்கயிறு, சாட்டை, மணி, சங்கிலி உள்ளிட்ட அனைத்து வித அலங்கார பொருட்கள் விற்பனையும் நடந்தது' என்றனர்.